தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குட்கா பறிமுதல் மூன்று பேர் கைது

 குட்கா பறிமுதல் மூன்று பேர் கைது

 குட்கா பறிமுதல் மூன்று பேர் கைது


ADDED : ஜன 21, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, பழவேற்காடு சாலையில் உள்ள ஒரு வீட்டில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவரைப்பேட்டை போலீசார் நேற்று, வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்த சங்கர், 40, என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், கவரைப்பேட்டை அடுத்த பன்பாக்கம் கிராமத்தில் நாகராஜ், 55, என்பவரின் பெட்டி கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்தணி திருத்தணி மதுவிலக்கு போலீசார், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த செல்வம், 47, என்பவரிடம் இருந்து, 17 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். செல்வத்தை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us