/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேன் ஓட்டுநரை தாக்கியவர்கள் கைது
/
வேன் ஓட்டுநரை தாக்கியவர்கள் கைது
ADDED : ஜன 21, 2026 06:35 AM
ஆர்.கே.பேட்டை: திருத்தணி அடுத்த வி.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 30; வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், ஆர்.கே.பேட்டை அடுத்த சுதாநகர் வழியாக பீமாரெட்டியூருக்கு, வேனில் கோழிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரது வேனை, இருசக்கர வாகனத்தில் முந்திச் சென்ற ராமதாஸ் மற்றும் அவரது தந்தை பிரம்மதேவன் ஆகியோர், அருணாச்சலத்தின் வேனை நிறுத்தினர்.
அருணாச்சலம் வேனை வேகமாக ஓட்டி சென்றதாக கூறி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அருணாச்சலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பிரம்மதேவன் மற்றும் ராமதாசை நேற்று கைது செய்து, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

