ADDED : ஜூன் 21, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:மப்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழச்சேரி அருகே சென்ற போது, மூன்று பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சத்தரை அபியூத், 22, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் ஆரோக்கியராஜ், 22, மற்றும் கடம்பத்துார் சிவராமன், 23, என தெரிந்தது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.