/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது
/
பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது
ADDED : செப் 02, 2025 12:21 AM
ஊத்துக்கோட்டை அரசு பள்ளி அருகே கஞ்சா, போதை மாத்திரை விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மேலகொண்டையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி அருகே, கஞ்சா, போதை மாத்திரை விற்கப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பள்ளி அருகே போதையில் இருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வேப்பம்பட்டு செல்வம், 29, திருநின்றவூர் அரிதார், 29, மேலக்கொண்டையூர் ஆகாஷ், 24 என்பது தெரிந்தது. அவர்கள் அப்பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 11 கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
--