/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மது பாட்டில் பதுக்கி விற்ற மூவர் கைது
/
மது பாட்டில் பதுக்கி விற்ற மூவர் கைது
ADDED : செப் 02, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி அருகே மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி ஒன்றியம் செருக்கனுார் கிராமத்தில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்த சீனிவாசன், 40, முருகம்மாள், 60, ஈசம்மாள், 40 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
★★