/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரியில் கஞ்சா கடத்திய மூவர் கைது
/
லாரியில் கஞ்சா கடத்திய மூவர் கைது
ADDED : செப் 28, 2025 11:34 PM
கும்மிடிப்பூண்டி;ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்திய 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைதுசெய்தனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக திருச்சி நோக்கி, லோடு லாரி சென்றது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம், 35, டிரைவராகவும், மாரிச்செல்வம், 31, கிளினராகவும் சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியை கடக்கும் போது, லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, ஓட்டுநர் கேபின் பகுதியில், 12 கிலோ எடையுள்ள ஆறு கஞ்சா பாக்கெட்டுகள் சிக்கின. டிரைவரையும், கிளினரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, சென்னை செங்குன்றம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வாங்க காத்திருப்பதாக தெரிவித்தனர்.
செங்குன்றத்தில் காத்திருந்த, சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, 37, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.