/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிறுத்தியிருந்த ரயில் பெட்டியில் பேட்டரி திருடிய மூவர் கைது
/
நிறுத்தியிருந்த ரயில் பெட்டியில் பேட்டரி திருடிய மூவர் கைது
நிறுத்தியிருந்த ரயில் பெட்டியில் பேட்டரி திருடிய மூவர் கைது
நிறுத்தியிருந்த ரயில் பெட்டியில் பேட்டரி திருடிய மூவர் கைது
ADDED : நவ 02, 2025 01:49 AM

மீஞ்சூர்: பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விரைவு ரயில் பெட்டிகளில் இருந்து, பேட்டரி திருடிய மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில், விரைவு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதற்கான பணிமனை உள்ளது.
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் அவ்வப்போது, பேட்டரி திருடுபோவது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் இருந்து, தண்டையார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்குள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், பணிமனை பகுதியில் டாடா ஏஸ் லாரி ஒன்று வந்து செல்வது தெரிந்தது.
அந்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடையது என்பதும், அவர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.
தொடர் விசாரணையில், பொன்னேரி அடுத்த குண்ணம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த மணிமாறன், 33, உடந்தையாக இருந்ததும், திருடிய பேட்டரிகளை பொன்னேரியில் உள்ள காயலான் கடையில் விற்பனை செய்ததும் தெரிந்தது.
அதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நகராஜ், 40, மணிமாறன், 33, காயலான் கடை உரிமையாளர் சீனிவாசன், 48, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 63 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

