/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணிக்கடையில் திருடிய மூவர் கைது
/
துணிக்கடையில் திருடிய மூவர் கைது
ADDED : மே 21, 2025 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:பொன்னேரி பகுதியைச் சேர்ந்த சந்துரு, 45, என்பவர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 6,500 ரூபாயை திருடி சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த பண்டு, 19, ஏசு, 30 மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.