/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டிய தொழிற்சாலையில் இரும்பு திருடிய மூவர் கைது
/
பூட்டிய தொழிற்சாலையில் இரும்பு திருடிய மூவர் கைது
ADDED : அக் 21, 2024 01:54 AM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில், தனியார் சிமென்ட் தொழிற்சாலை 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது.
இந்த தொழிற்சாலையில் இருந்து இரு தினங்களுக்கு முன், 700 கிலோ இரும்பு பொருட்களை, காரில் வந்த மூன்று மர்ம நபர்கள் திருடி, மினி லாரியில் எடுத்து சென்றதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தொழிற்சாலை தரப்பில், கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்து போலீசார், திருட்டில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 40, எடப்பாளையம் முரளி, 34, பெரியார் நகர் முருகன், 46, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இவர்களிடம் இருந்து, திருடப்பட்ட இரும்பு பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரி மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

