/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
21 கிலோ கஞ்சா பறிமுதல் பூந்தமல்லியில் மூவர் கைது
/
21 கிலோ கஞ்சா பறிமுதல் பூந்தமல்லியில் மூவர் கைது
ADDED : செப் 17, 2025 02:04 AM
பூந்தமல்லி,:பூந்தமல்லியில், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த மூவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம், 21 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிபா பெகரா, 31, ராமகண்டா மஞ்கி, 30, அலோக புன்ஜி, 28, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை புறநகரில் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.