/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செக்யூரிட்டி கொலை மூன்று பேர் சிக்கினர்
/
செக்யூரிட்டி கொலை மூன்று பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 03, 2025 07:56 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அகூர் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சூர்யா, 25. இவர், அதே பகுதியில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகே, அகூர் காலனியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் நிலத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனுாரைச் சேர்ந்த அருண், 35, என்பவர் தரைவாடகை எடுத்து, மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வந்தார்.
இதனால், சூர்யாவிற்கு வியாபாரம் குறைந்ததை தொடர்ந்து, வேலாயுதத்திடம் தகராறு செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன், வேலாயுதத்தின் தாய்மாமன் ரவி, 60, என்பவர், 'என்னுடைய மச்சானிடம் எதற்காக தகராறு செய்கிறாய்' என, சூர்யாவை கண்டித்துள்ளார். ரவி தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, அகூர் காலனியைச் சேர்ந்த தினேஷ், 22, முன்னா, 24, விக்கி, 24, மற்றும் அப்பு, 24, ஆகிய நான்கு பேருடன், நேற்று முன்தினம் இரவு, ரவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில், ரவி உயிரிழந்தார்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சூர்யா, விக்கி, அப்பு ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், தினேஷ், முன்னா ஆகியோரை தேடி வருகின்றனர்.