/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அண்ணனை கழுத்தறுத்து கொன்ற 'பாசக்கார' தம்பி உட்பட மூவர் கைது
/
அண்ணனை கழுத்தறுத்து கொன்ற 'பாசக்கார' தம்பி உட்பட மூவர் கைது
அண்ணனை கழுத்தறுத்து கொன்ற 'பாசக்கார' தம்பி உட்பட மூவர் கைது
அண்ணனை கழுத்தறுத்து கொன்ற 'பாசக்கார' தம்பி உட்பட மூவர் கைது
ADDED : மார் 17, 2024 01:06 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூரில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. இது குறித்து, அந்த வழியாக சென்ற கிராம மக்கள், செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்கு பதிந்து, உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், போலீசார் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் சரஸ்வதி நகர், 4வது தெருவைச் சார்ந்த சோழராஜன், 40, என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரித்ததில், அவர் சில நாட்களுக்கு முன், வடக்கு செய்யூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும், நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டில் இருந்த சோழராஜனை, அவரது தம்பி பிரபு, 33, அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் பிரபுவை கைது செய்து விசாரித்ததில், கடந்த 9ம் தேதி சோழராஜன் மற்றும் அவரது தாய் தமிழ்மணி வெளியில் சென்றுள்ளனர்.
அப்போது, தமிழ்மணி எதிர்பாராத விதமாக இறந்துள்ளார். தாயின் இறப்பிற்கு சோழராஜன் தான் காரணம் என, கடந்த 12ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சோழராஜன் தாக்கியதில் பிரபுவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிரபு, தன் அண்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து, பிரபு தன் நண்பர்களான விஜயகுமார், 35, கோபி, 38, ஆகியோருடன் சேர்ந்து, வடக்கு செய்யூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சோழராஜனை அழைத்துச்சென்று, ஓதியூர் கிராமத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, சாலையோரத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது.
இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

