/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் விற்பனை தம்பதி உட்பட மூவர் கைது
/
போதை பொருள் விற்பனை தம்பதி உட்பட மூவர் கைது
ADDED : அக் 21, 2024 02:26 AM
அரும்பாக்கம:கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தீபக், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர் மாதவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மெத்தம் பெட்டமைன் போதை பொருளை விற்றுவந்துள்ளார். இவருக்கு உதவியாக, இவரது மனைவி டாலி, 28, என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இவர்கள், போதை பொருள் விற்பதை அறிந்த அண்ணா நகர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அவர்களிடமிருந்த 2.29 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீபக், அவரது நண்பர் வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த முத்துக்குமார், 36, என்பவரிடம் போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, முத்துக்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.370 கிராம் மெத்தம் பெட்டமையின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அயனாவரம் காவல் நிலைக்குட்பட்ட பகுதியில் மெத்தம் பெட்டமைன் வைத்திருந்த பாலசண்முகம், அருண் லக்ஷ்மணன், ரஞ்சித் ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.