/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நின்ற லாரி மீது ஜீப் மோதல்; செருப்பு வியாபாரி மூவர் பலி
/
நின்ற லாரி மீது ஜீப் மோதல்; செருப்பு வியாபாரி மூவர் பலி
நின்ற லாரி மீது ஜீப் மோதல்; செருப்பு வியாபாரி மூவர் பலி
நின்ற லாரி மீது ஜீப் மோதல்; செருப்பு வியாபாரி மூவர் பலி
ADDED : டிச 05, 2024 04:39 AM
கருகம்புத்துார் : சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சவுபர் சாதிக், 33, அனீஸ் அலி, 22, திருவான்மியூரைச் சேர்ந்தவர் உஸ்மான், 33, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் மாலிக் பாஷா, 35. அனைவரும் செருப்பு வியாபாரிகள்.
சென்னையிலிருந்து நேற்று அதிகாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 'பொலிரோ' ஜீப்பில் பெங்களூருக்கு மொத்தமாக செருப்பு கொள்முதல் செய்ய சென்றனர்.
அதிகாலை, 4:30 மணிக்கு, வேலுார் மாவட்டம், கருகம்புத்துார் அருகே சென்றபோது, நிலை தடுமாறிய ஜீப், சாலை தடுப்பு சுவரில் மோதி, சர்வீஸ் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது.
இதில் ஜீப் நொறுங்கி சம்பவ இடத்திலேயே, காரை ஓட்டிச் சென்ற சவுபர் சாதீக் மற்றும் அனீஸ் அலி, உஸ்மான் ஆகியோர் பலியாகினர். மாலிக் பாஷா படுகாயத்துடன், வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேலுார் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.