/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யலாம்
/
திருத்தணி முருகன் கோவிலில் டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யலாம்
திருத்தணி முருகன் கோவிலில் டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யலாம்
திருத்தணி முருகன் கோவிலில் டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்யலாம்
ADDED : மார் 29, 2025 10:30 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மூலவர் முருகப்பெருமானுக்கு, தினமும் காலை 8:00 மணிக்கு காலசந்தி, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் மாலை 5:00 மணிக்கு சாய்ரட்சை ஆகிய மூன்று வேளைகளில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற, மூன்று வேளை அபிஷேகத்தில் பங்கேற்க, 2,000 ரூபாய் அபிஷேக கட்டணமாக செலுத்தி, ஒரு டிக்கெட் பெற்று இருவர் பங்கேற்பர். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும், குறைந்தபட்சம், 10 பேர் முதல் அதிகபட்சமாக, 35 பேர் பணம் கட்டி முன்பதிவு டிக்கெட் பெறுவர்.
ஒரு மணி நேரம் நடக்கும் மூலவர் அபிஷேகத்தின் போது, அபிஷேக டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்று தரிசனம் செய்ய முடியும். அப்போது, பொதுவழி மற்றும் 100 ரூபாய் கட்டண டிக்கெட் பெற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. அபிஷேகம் முடிந்த பின், பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும்.
இதனால், பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் அபிஷேக நேரத்திலும் பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்வதற்கு வசதியாக, அபிஷேக டிக்கெட்டுகள் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு அபிஷேக நேரத்திலும், 15 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்வதற்கு ஆணை பிறக்கப்பட்டது. இந்த டிக்கெட் வாயிலாக, 30 பக்தர்கள் மட்டுமே மூலவர் முன் அமர்ந்து அபிஷேகம் பார்ப்பதற்கும், மீதமுள்ள பக்தர்கள் தடையின்றி மூலவரை தரிசித்து செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், பக்தர்கள் அபிஷேக நேரத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.