/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்
/
கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைப்படுத்த அவகாசம்
ADDED : ஜூலை 05, 2025 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த, 2026 ஜூன் வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திட்டமில்லா பகுதிகளில், கடந்த ஜன., 2011ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 1 முதல் 2026 ஜூன் 30ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.