ADDED : ஜன 07, 2024 01:27 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது துராபள்ளம் பஜார் பகுதி. சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கான முக்கிய சந்தை பகுதியாகும்.
தற்போது, அந்த பஜார் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
கால்வாய் பணிகள் முழுமை பெற உள்ள நிலையில், சாலை விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள, 75க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தாமாக அகற்றிக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.
கடைகள் அப்படியே இருந்ததால், நேற்று, போலீசாருடன் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சென்றனர். பொங்கல் பண்டிகை வியாபாரம் பாதிக்கும் என்பதால், அதுவரை அவகாசம் அளிக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், அவர்களுக்கு பொங்கல் பண்டிகை வரை அவகாசம் அளிக்கப்பட்டது.