/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நின்ற லாரி மீது டிப்பர் லாரி மோதல்
/
நின்ற லாரி மீது டிப்பர் லாரி மோதல்
ADDED : ஜூன் 23, 2025 11:09 PM

திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது, கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு கனரக லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரி, பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த கனரக லாரியின் பின்புறம் மோதியது.
இதில், லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. கடலுாரைச் சேர்ந்த அருள், 40, என்பவர் லாரியில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும் சோதனைச்சாவடியில் இருந்த போலீசார், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஓட்டுநரை மீட்டனர்.
இதில், அவருக்கு இரு கால்களிலும் காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.