/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு தேவை
/
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு தேவை
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு தேவை
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு தேவை
ADDED : நவ 21, 2024 02:42 AM
திருத்தணி,
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், அரசு மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்டோர், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த வாரம், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன், கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் காவலர் ஒருவர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்.
இவரிடம், அடிதடி வழக்குகளில் காயமடைந்து, மருத்துவமனைக்கு வரும் நபரிடன் ஆதரவாளர்கள், தகராறில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக, அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சீ.ராதிகாதேவி, திருத்தணி டி.எஸ்.பி., கந்தனிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிப்பதாவது:
திருத்தணி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஒரு காவலர் மட்டுமே உள்ளார். இதனால், மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில், பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மீதான தாக்குதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, கூடுதல் போலீசார் நியமித்து, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற டி.எஸ்.பி., நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.