/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தளபதி பள்ளி அசத்தல் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
/
திருத்தணி தளபதி பள்ளி அசத்தல் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
திருத்தணி தளபதி பள்ளி அசத்தல் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
திருத்தணி தளபதி பள்ளி அசத்தல் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்
ADDED : மே 11, 2025 12:57 AM

திருத்தணி:திருத்தணி தளபதி கே.வினாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த மார்ச் மாதம், 97 மாணவ - மாணவியர் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இதில், ஹபினையா என்ற மாணவி, 600க்கு 590 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், தனுஸ்ரீகா, லிகிதாஸ்ரீ, ரக்ச்சனா ஆகியோர், 600க்கு 583 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஷாகிராபானு என்ற மாணவி, 600க்கு 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
இதுதவிர, 41 மாணவர்கள் இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், உயிரியல், வணிகவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 550க்கு மேல், 27 பேரும், 500க்கு மேல், 65 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியரை பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி பாராட்டி, பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில், துணை முதல்வர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.