/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சரவணபொய்கை குளம் துார்வாரும் பணி துவக்கம்
/
திருத்தணி சரவணபொய்கை குளம் துார்வாரும் பணி துவக்கம்
திருத்தணி சரவணபொய்கை குளம் துார்வாரும் பணி துவக்கம்
திருத்தணி சரவணபொய்கை குளம் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : மே 16, 2025 03:00 AM

திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு படிகள் வழியாக செல்லும் நுழைவு பகுதியில் சரவணபொய்கை என்ற குளம் உள்ளது.
இந்த குளத்தை முருகன் கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு முன் சில பக்தர்கள் குளத்தில் புனித நீராடிய பின் படிகள் வழியாக நடந்து செல்கின்றனர். இதுதவிர ஆண்டுதோறும், ஆடிக்கிருத்திகை விழாவில், மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா இந்த குளத்தில் நடக்கிறது.
அதாவது உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து படிகள் வழியாக குளம் வந்து அங்கு அமைக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி திருக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்நிலையில் குளத்தில் தண்ணீர் மாசுப்பட்டு இருந்ததும், குளத்தை துார்வாரி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் நிர்வாகம் துார்வாரி சீரமைப்பதற்கு தீர்மானித்தது.
இந்நிலையில் குளத்தில் துார்வாரி சீரமைப்பதற்கு பெங்களூரு சேர்ந்த பக்தர் ஸ்ரீதர் என்பவர், 22.50 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
அந்த பணத்தில் கோவில் நிர்வாகம் குளத்தை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் கட்டமாக ராட்சத மின்மோட்டார்கள் மூலம் குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி வருகிறது. ஒரிரு நாளில் தண்ணீர் முழுமையாக வற்றியதும் துார்வாரும் பணிகள் துவங்கி முடிக்கப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
★★