/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு எழுத்தர் நியமிக்க எதிர்பார்ப்பு
/
திருத்தணி சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு எழுத்தர் நியமிக்க எதிர்பார்ப்பு
திருத்தணி சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு எழுத்தர் நியமிக்க எதிர்பார்ப்பு
திருத்தணி சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு எழுத்தர் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2025 10:12 PM
திருத்தணி:திருத்தணி காந்தி ரோடு, பழைய தாலுகா அலுவலகத்தில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, பிறப்பு - இறப்பு சான்று, திருமண பதிவு உள்ளிட்ட பதிவுகள் செய்யப்படுகின்றன.
கடந்த 1980ம் ஆண்டு வரை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு மொழி மற்றும் தமிழ் மொழியில் பத்திரப்பதிவு நடந்தது. இதற்கு காரணம், 1960ம் ஆண்டு வரை, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தில் திருத்தணி நகரம் இருந்தது. அதன்பின் தான் திருத்தணி நகரம், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இதனால், அதிகளவில் பத்திரப்பதிவுகள் தெலுங்கு மொழியில் நடந்தது. சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு எழுத்தர் பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி வந்த தெலுங்கு எழுத்தர் பணி ஓய்வு பெற்றார். அதன்பின், இதுவரை தெலுங்கு எழுத்தர் நியமிக்கப்படவில்லை.
தெலுங்கு மொழியில் பத்திரவுப்பதிவு செய்தவர்கள் வில்லங்க சான்று, பத்திரப்பதிவு நகல் கேட்கும் போது, தெலுங்கு மொழியில் இருந்து தமிழ் மொழியில் மாற்றம் செய்வதற்கு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர் இல்லாததால், மேற்கண்ட சான்றுகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தெலுங்கு மொழி பத்திரங்களில் இருந்து வில்லங்க சான்று கேட்கும் போது, தெலுங்கு படித்த தனிநபர் மூலம் மொழி மாற்றம் செய்து தருவதற்கு, மாத கணக்கில் ஆகிறது.
எனவே, திருத்தணி சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெலுங்கு மொழி எழுத்தர் நியமிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.