sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அதிகளவு பயணிகளுடன் சென்ற பஸ்சில் தவறி விழுந்த பள்ளி மாணவன்

/

அதிகளவு பயணிகளுடன் சென்ற பஸ்சில் தவறி விழுந்த பள்ளி மாணவன்

அதிகளவு பயணிகளுடன் சென்ற பஸ்சில் தவறி விழுந்த பள்ளி மாணவன்

அதிகளவு பயணிகளுடன் சென்ற பஸ்சில் தவறி விழுந்த பள்ளி மாணவன்


ADDED : செப் 16, 2011 03:46 AM

Google News

ADDED : செப் 16, 2011 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:அதிகளவு பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சிலிருந்து, பள்ளி மாணவன் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஊத்துக்கோட்டை அரசு பஸ் டிப்போவிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இப்பகுதியில் அரசு பஸ்கள் அதிகரிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளதால், காலை, மாலை வேளைகளில் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள், அரசு பஸ்சை நம்பியே உள்ளனர்.

ஏற்கனவே அதிகளவு பயணிகளுடன் செல்லும் பஸ்சில் மாணவர்கள் ஏறிக் கொள்வதால், அவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேற்றுமுன்தினம் காலை தடம் எண்.131ஏ, அரசு பஸ் மாதர்பாக்கம் சென்று விட்டுஊத்துக்கோட்டை சென்று கொண்டிருந்தது. வழியில் தொம்பரம்பேடு என்ற இடத்தில், தாமரைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் என்ற மாணவன், மேற்கண்ட பஸ்சில் ஏறினான். கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கிக் கொண்டு

பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏற்கனவே குண்டும் குழியுமாக காணப்படும் இச்சாலையில் ஊத்துக்கோட் டை அம்பேத்கர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பஸ்சிலிருந்து தனஞ்செழியன் தவறி கீழே விழுந்தார்.தலையில் பலத்த காயமடைந்த மாணவரை பஸ்சில் பயணம் செய்தவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஊத்துக்கோட்டை - சென்னை வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்கள் இயக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us