/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காந்தி சிலை இடமாற்றம் த.மா.கா., கட்சியினர் மனு
/
காந்தி சிலை இடமாற்றம் த.மா.கா., கட்சியினர் மனு
ADDED : நவ 22, 2024 01:05 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலை, காமராஜ் காய்கறி மார்க்கெட் அருகே, காந்தி சிலை உள்ளது. அப்பகுதி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் காந்தி சிலையை புதியதாக கட்டடப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு மாற்றுவதற்கு கடந்த, 19ம் தேதி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் த.மா.கா., கட்சி தவிர மீதமுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று காந்தி சிலை சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று த.மா.கா., கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நகர தலைவர் கார்த்திகேயன், நகர துணை தலைவர்கள் ரமேஷ், சிவக்குமார் ஆகியோர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன் மற்றும் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோரை சந்தித்து, காந்தி சிலை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
★★