ADDED : நவ 01, 2026 04:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று (நவ.,1) நடந்த டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் – 2 மற்றும் குரூப் – 2ஏ எழுத்து தேர்வில், 2,496 பேர் பங்கேற்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில், 28 மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் குரூப் – 2ஏ எழுத்து தேர்வு, இன்று நடந்தது.
இதற்காக விண்ணப்பித்திருந்த, 11,519 தேர்வர்களில், 9,023 பேர் தேர்வு எழுதினர். 2,496 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், பார்வையற்றோர் தேர்வு எழுத வசதியாக, மாற்று நபர் கொண்ட தனி அறைகளும், ஒவ்வொரு தேர்வுக்கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று நடந்த தேர்வில், 38 தலைமை கண்காணிப்பாளர்கள், 12 இயக்கக் குழு அலுவலர்கள், நான்கு பறக்கும் படை குழுவினர் மற்றும் 38 ஆய்வு அலுவலர்கள் இடம்பெற்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
