/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி அருகே புகையிலை பொருள்: விற்பனையை தடுக்க புது திட்டம்
/
பள்ளி அருகே புகையிலை பொருள்: விற்பனையை தடுக்க புது திட்டம்
பள்ளி அருகே புகையிலை பொருள்: விற்பனையை தடுக்க புது திட்டம்
பள்ளி அருகே புகையிலை பொருள்: விற்பனையை தடுக்க புது திட்டம்
ADDED : அக் 06, 2025 11:22 PM
ஆவடி, ஆவடியில், பள்ளி அருகே புகையிலை பொருள் விற்பனை செய்வதை தடை செய்யும் விதமாக, '100 யார்ட்ஸ்' எனும் 'புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பள்ளி மண்டலம்' என்ற திட்டம், நேற்று அமலுக்கு வந்தது.
பட்டாபிராம், தண்டுரை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று காலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், அது குறித்த சட்டம் மற்றும் தமிழக அரசின் 'டிரக் ப்ரீ தமிழ்நாடு' என்ற செயலி குறித்து, கமிஷனர் சங்கர் மாணவ - மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
முதற்கட்டமாக, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள 50 பள்ளிகளில் இந்த திட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து அக்., 9ம் தேதிக்குள், 200 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கமிஷனர் சங்கர் கூறியதாவது:
பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அதன்படி, பள்ளி வளாகத்தில் இருந்து '100 யார்ட்ஸ்' அதாவது 91.44 மீட்டர் துாரத்தில் செயல்படும் மளிகைக்கடை மற்றும் பெட்டி கடைகளில், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடையாளம் காணும் வகையில், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்பு அமைத்து, வெள்ளை நிறத்தில் மைய கோடு போடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விதி மீறி செயல்படும் மதுபான கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.