ADDED : அக் 06, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது.
திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று காலை 8:00 - மாலை 4:00 மணி வரை வெயில் கொளுத்தியது. இதனால், பெரும்பாலான மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர்.
நேற்று மாலை 4:30 - மாலை 6:30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், திருத்தணி நகரத்தில் பெரும்பாலான சாலைகளில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருத்தணி ம.பொ.சி.சாலை மற்றும் அரக்கோணம் சாலையில், மழைநீர் அதிகளவில் சென்றதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். அதேபோல், திருத்தணியை சுற்றியுள்ள கிராமங்களிலும் பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.