நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள வீராச்சாமி நகர் பகுதியில், 'டாஸ்மாக்' கடை இயங்காத நேரங்களில், மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ருக்கு, 70, என்ற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்து ஒன்பது குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.