/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி
/
திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி
ADDED : நவ 07, 2024 01:14 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம், வெள்ளி கவசம், சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது.
மேலும், காலை 8:30 மணிக்கு உற்சவர் சண்முகர் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின், உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 8:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
இன்று மாலை 5:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.
ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.