/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் வளாகத்தில் 7 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
/
கோவில் வளாகத்தில் 7 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
கோவில் வளாகத்தில் 7 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
கோவில் வளாகத்தில் 7 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை
ADDED : ஆக 18, 2025 11:35 PM

திருத்தணி, கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறைகள், ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கின்றன.
திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
இக்கோவில் வளாகத்தில் விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் ஆகிய கோவில்களும் உள்ளன. மேலும், வள்ளி யானை நினைவு மண்டபம், மங்கள வாத்திய பயிற்சி பள்ளியும் அமைந்துள்ளன. இக்கோவில், காலை 6:00 - 11:00 மணி வரையும், மாலை 4:00 - இரவு 8:00 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும்.
அப்போது, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்வர். மேலும், கிருத்திகை மற்றும் முக்கிய விழாக்களின் போது, முழுநேரமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் .
கோவில் வளாகத்தில் கழிப்பறை இல்லாததால், 2018ல் முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு குளியல் அறை, இரண்டு கழிப் பறைகள் கட்டப்பட்டன.
ஆனால், குளியலறை, கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பாதை ஏற்படுத்தாததால், ஏழு ஆண்டுகளாக அவை பயன்பாட்டிற்கு விராமல் பூட்டியே கிடக்கின்றன.
தற்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, கழிப்பறைக்கு தண்ணீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

