/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் நாளை மின்சப்ளை நிறுத்தம்
/
திருத்தணியில் நாளை மின்சப்ளை நிறுத்தம்
ADDED : ஜன 29, 2024 06:51 AM
திருத்தணி: திருத்தணி நகரத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இதை அகற்றுவதற்கு திருத்தணி மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக இன்று திருத்தணி துணைமின் நிலையத்தில், சுப்ரமணிய நகர், கமலா தியேட்டர் பின்புறம், சித்துார் சாலை, டெலிபோன் அலுவலகம் பின்புறம், மசூதி தெரு, நேரு நகர், செங்குந்தர் நகர், சாய்பாபா நகர், அமிர்தாபுரம், பாலாஜி நகர், மேல்திருத்தணி, முருகூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.