UPDATED : செப் 30, 2026 10:23 PM
ADDED : செப் 30, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
பொன்னேரி:'ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்., 2 ஒருநாள் மட்டும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணம் மட்டுமே பெறப்படும்' என, திருவள்ளூர் மாவட்ட வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வணிக நோக்கத்திற்காக, 2,000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இச்சங்கத்தின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணி சார்பில், நாளை அறவழி போரட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக, நாளை ஒருநாள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை தவிர்த்து, பணம் மட்டுமே பெறப்படும் என அறிவித்துள்ளது.
