/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர்கள் மோதல் நால்வர் படுகாயம்
/
டூ - வீலர்கள் மோதல் நால்வர் படுகாயம்
ADDED : பிப் 11, 2025 12:09 AM
திருத்தணி,அண்ணணுார், கொட்டிவாக்கம், சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சுதர்சன், 29; இவர், நண்பர்களுடன் நேற்று முன்தினம் திருத்தணி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து திருத்தணி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 11:40 மணிக்கு, திருத்தணி அடுத்த, விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால், 'டியூக்' இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மோதியதில், சுதர்சன் மற்றும் நண்பர்களான எண்ணுாரைச் சேர்ந்த ராகுல், விக்னேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும், இரு சக்கர வாகனத்தில் வந்த பவித்திரனும் படுகாயம் அடைந்தார். மேலும், விபத்துக்குள்ளான பவித்ரன் இருசக்கர வாகனத்தின் மீது, 'பல்சர்' இருசக்கர வாகனம் மோதியது.
இதில் வந்த திருத்தணியைச் சேர்ந்த பானுபிரகாஷ் என்பவரும் படுகாயம் அடைந்தார். ராகுல், பானுபிரகாஷ் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.