/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : டிச 03, 2024 06:16 AM

திருவள்ளூர்: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மற்றும் சாலையோரம் விளம்பர பேனர்கள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது.
இதில், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலையோர உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், இவ்வாறு உயரமான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் பல இடங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி பிரித்து சுற்றி வைக்கப்பட்டது.
சில இடங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தலை அலட்சியம் காட்டியதால், 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட பலத்த காற்றால் இந்த பேனர்கள் தற்போது ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்குகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதேபோல் 1 லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் செல்லும் சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களும் கிழிந்து தொங்குகின்றன.
எனவே, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி விளம்பர பேனர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.