sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழவேற்காடு படகு குழாம் மேம்படுத்த சுற்றுலாப்பயணியர் எதிர்பார்ப்பு

/

பழவேற்காடு படகு குழாம் மேம்படுத்த சுற்றுலாப்பயணியர் எதிர்பார்ப்பு

பழவேற்காடு படகு குழாம் மேம்படுத்த சுற்றுலாப்பயணியர் எதிர்பார்ப்பு

பழவேற்காடு படகு குழாம் மேம்படுத்த சுற்றுலாப்பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : மார் 28, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 28, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:பழவேற்காடில், ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு குழாம் பயன்பாட்டிற்கு முன்பே பாழடைந்து போனது சுற்றுலாபயணியரியர் இடையே அதிருப்தியை ஏற்புடுத்தியுள்ளது. புதிய வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப்பகுதியானது, தமிழகத்தின் வடகோடியில் அமைந்து உள்ளது. இங்கு கடலும் ஏரியும் இணையும் அழகிய முகத்துவாரம், பிரசித்தி பெற்ற ஆதிநாராய பெருமாள் கோவில், கலங்கரை விளக்கம், மகிமை மாதா ஆலயம், டச்சுக்கல்லறைகள், சென்னை மெரினா போன்ற அழுகிய கடற்கரை ஆகியவை அமைந்து உள்ளன.

ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் சரணலாயமும் இங்கு உள்ளது.

மாவட்டத்தின் சுற்றுலாத்தளமாக உள்ள இங்கு வார விடுமுறை நாட்கள், புத்தாண்டு, காணும்பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணியர் இங்கு வந்து செல்கின்றனர்.

அவர்கள் அங்குள்ள கலங்கரை விளக்கம், டச்சுக்கல்லறைகள் பார்வையிட்டு, பின் கடற்கரையில் அமர்ந்து ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர்.

அதே சமயம் சுற்றுலாப்பயணியருக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி, குளியல் அறை, தங்கும் விடுதிகள், உணவகங்கள் என எந்தவொரு அடிப்படை வசதியும் இங்கு இல்லை. இதனால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பழவேற்காடு ஏரி ஆந்திர மாநிலம் வரை பரந்து விரிந்து இருக்கிறது. சுற்றுலாப்பயணியர் படகுகளில் சவாரி செய்து ஏரியின் அழகையும், தீவுப்பகுதிகளில் உள்ள சரணாலயத்தில் பறவைகளையும் கண்டு மகிழ்வர்.

கடந்த, 2008ல், சுற்றுலாப்பயணியருக்காக பழவேற்காடு ஏரி அருகே உள்ள தோணிரவு மீனவ கிராமத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் படகு குழாம் அமைக்கப்பட்டது.

இங்கு வணிக வளாகங்கள், சுகாதார வளாகம், பூங்கா, அதை சுற்றிலும் ஒய்வெடுக்க இருக்கைகள், அழகிய நீருற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக படகு தளம், ஏரியின் அழகை ரசிக்க ஏதுவாக குடில்கள் என வசதிகளுடன் இது அமைந்தது.

படகு குழாம் அமைத்து, செயல்பாட்டிற்கு கொண்டு வராமலேயே அத்திட்டம் முடங்கியது. இதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள் பயனின்றி வீணானது. தற்போது அவற்றை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன.

படகுகள் நிறுத்தவதற்காக அமைக்கப்பட்ட தளம் இருந்த சுவடே தற்போது அங்கு இல்லை. கட்டடங்கள் சேதம் அடைந்து வீணானது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, ஜூன் மாதம், அப்போதையை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் சுற்றுலா, மீன்வளம், வனம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுலாத்துறை வாயிலாக படகு சவாரி செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதன் வாயிலாக பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலாப்பயணியர் அதிகளவில் வருவர். அதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில், அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் இல்லை. ஏற்கனவே நிதி ஒதுக்கி உருவாக்கப்பட்ட படகு குழாமும் செயலின்றி கிடக்கிறது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படாமல் பெயருக்குத்தான் சுற்றுலாத்தலமாக இருக்கிறது.

இது மீனவ மக்கள், சுற்றுலாப்பயணியர் மற்றும் சுமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

பழவேற்காடு பகுதி சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முறைபடுத்தப்பட்ட படகு சவாரி அமைப்பது தொடர்பாக அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப்பயணியருக்கு பயன்படும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us