/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேற்றம்? ...மூச்சு திணறல்:கும்மிடி., மாணவியர் 4 பேருக்கு சிகிச்சை
/
தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேற்றம்? ...மூச்சு திணறல்:கும்மிடி., மாணவியர் 4 பேருக்கு சிகிச்சை
தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேற்றம்? ...மூச்சு திணறல்:கும்மிடி., மாணவியர் 4 பேருக்கு சிகிச்சை
தொழிற்சாலையில் நச்சு வாயு வெளியேற்றம்? ...மூச்சு திணறல்:கும்மிடி., மாணவியர் 4 பேருக்கு சிகிச்சை
UPDATED : ஆக 27, 2025 02:20 AM
ADDED : ஆக 27, 2025 02:16 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் அரசு பள்ளி வகுப்பறையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவியர் நான்கு பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளி அருகே உள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதே காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜகண்டிகை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவியர் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், 168 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
நச்சு வாயு இரு தளங்கள் கொண்ட பள்ளி கட்டடத்தில், முதல் தளத்தில், பத்தாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறைகள் உள்ளன. அதில், கடைசியாக உள்ள பத்தாம் வகுப்பறை அருகே தனியார் இரும்பு தொழிற்சாலை அமைந்து உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு துவங்கியது முதல் அந்த தொழிற்சாலையில் இருந்து மதிய நேரத்தில் வாயு வெளியேறும் போது, மூச்சு திணறல் ஏற்படுவதாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் சார்பில், தொழிற்சாலை நிர்வாகத்தை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கப்பட்டது. வாயு வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம், அந்த தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அப்போது பத்தாம் வகுப்பறையில் இருந்த மாணவியர் சித்தராஜகண்டிகை காயத்ரி, 14, தாரகேஸ்வரி, 14, பாப்பான்குப்பம் யுவஸ்ரீ, 14, ஸ்ருதி, 14 ஆகிய நான்கு மாணவியருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இதில் மாணவி தாரகேஸ்வரி, ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூன்று மாணவியர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
உரிய நடவடிக்கை அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற காயத்ரி மற்றும் யுவஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவி ஸ்ருதி மட்டும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'இது குறித்து புகார் கிடைக்க பெற்றோம். சம்பவம் நடந்த பகுதியில், பிரத்யேக கருவி வாயிலாக மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் தொழிற்சாலைகளை கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.