/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திருவாலங்காடில் கவிழ்ந்து விபத்து
/
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திருவாலங்காடில் கவிழ்ந்து விபத்து
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திருவாலங்காடில் கவிழ்ந்து விபத்து
கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் திருவாலங்காடில் கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 17, 2024 12:37 AM

திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; இவர், நேற்று காலை, தன் நிலத்தில் விளைந்த கரும்பை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு, திருவாலங்காடில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்காக தக்கோலம் நெடுஞ்சாலை வழியாக வந்தார்.
திருவாலங்காடு கூட்டுச்சாலை சந்திப்பில் வந்தபோது ஏரி நீர் செல்ல நெடுஞ்சாலை குறுக்கே அமைக்கப்பட்ட சிறுதரைப்பாலத்தில் டிராக்டரை நிறுத்தினார்.
அப்போது பாரம் தாங்காமல் தரைப்பாலத்தில் ஓட்டை விழுந்து டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பிய நிலையில், கரும்புகள் சாலையில் சரிந்தது இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார், சாலையில் சரிந்த கரும்பை அகற்றி போக்குவரத்தை சீரமைத்து விசாரிக்கின்றனர்.