/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்து பகுதியான கும்மிடி சிப்காட் சந்திப்பு தொடரும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
/
விபத்து பகுதியான கும்மிடி சிப்காட் சந்திப்பு தொடரும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
விபத்து பகுதியான கும்மிடி சிப்காட் சந்திப்பு தொடரும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
விபத்து பகுதியான கும்மிடி சிப்காட் சந்திப்பு தொடரும் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
ADDED : பிப் 14, 2025 02:12 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் சந்திப்பில், இடியாப்ப சிக்கல் போல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் அடுத்தடுத்து இருவர் விபத்தில் உயிரிழந்ததால், போலீசார் தனி கவனம் செலுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணிளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
சென்னை -- கோல்கட்டா சேதிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் முடியும் இடத்தில் மழைநீர் கடந்து செல்லும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், 15 தினங்களுக்கு முன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால், சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும், சிப்காட் சந்திப்பில் உள்ள இணைப்பு சாலை வழியாக செல்கின்றனர். சீரான வாகன போக்குவரத்துடன் காணப்பட்ட சிப்காட் சந்திப்பு, போக்குவரத்து திருப்பி விட்டபின் இடியாப்ப சிக்கல் போல் வாகனங்கள் சிக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சிப்காட் சந்திப்பில் ஸ்தம்பித்து நின்று, பின் கிடைக்கும் இடைவெளியில் புகுந்து செல்கின்றன.
அச்சுறுத்தும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி, கடந்த ஜனவரி மாதம், 30ம் தேதி, கணவருவடன் டூ- -வீலரில் சென்ற பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி, 30, என்பவர் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, இம்மாதம், 7ம் தேதி, டூ-- வீலரில் சென்ற, கும்மிடிப்பூண்டி கோரிமேடு பகுதியை சேர்ந்த மனோ, 27, என்பவர் உயிரிழந்தார். இருவரும் லாரியில் சிக்கி உயிரிழந்தனர்.
விபத்து நடந்த நாட்களில் மட்டும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். அதன்பின் போலீசார் கண்டுக்கொள்ளவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கால்வாய் அமைக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைந்து முடித்து பழையபடி மேம்பாலத்தில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். அதுவரை, 24 மணி நேரமும் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளை போலீசார் முறையாக மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், தொழிலாளர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.

