/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரைப்பாலம் மூழ்கியதால் பரிக்குப்பட்டு- கூடுவாஞ்சேரி இடையே போக்குவரத்து பாதிப்பு

ADDED : டிச 02, 2024 02:59 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகாவணம், பரிக்குப்பட்டு, உப்பளம், மடிமைகண்டிகை வழியாக, ஆசானபூதுார் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லும் ஓடைக்கால்வாய் உள்ளது.
பரிக்குப்பட்டு -- கூடுவாஞ்சேரி கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையில், மேற்கண்ட கால்வாயின் குறுக்கே வாகன போக்குவரத்து வசதிக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாயின் அகலம், 40 அடியாக உள்ள நிலையில், இங்குள்ள பாலம், மூன்று அடி அகலத்தில் குறுகலாக இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த மூன்று தினங்களாக பெயய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஓடைக்கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
குறுகிய பாலத்தின் வழியாக தண்ணீர் வெளியேற வழியின்றி, தரைப்பாலத்தின் மீது வழிந்தோடி மீண்டும் அதே கால்வாய் வழியாக மீண்டும் பயணிக்கிறது.
தரைப்பாலத்தின் மீது, இரண்டு உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், பரிக்குப்பட்டு -- கூடுவாஞ்சேரி இடையே போக்குவரத்து பாதித்து உள்ளது.
இரு கிராமங்களை சேர்ந்தவர்களும், மாற்று பாதையில், மூன்று கி.மீ., தொலைவிற்கு சின்னகாவணம் அல்லது காட்டாவூர் கிராமங்களை சுற்றி பயணிக்கின்றனர்.
கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை அகற்றிவிட்டு, அதன் அகலத்திற்கு உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாத நிலையில் அவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.