/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய பதிவுக்கு வரும் வாகனங்களால் கும்மிடியில் போக்குவரத்து பாதிப்பு
/
புதிய பதிவுக்கு வரும் வாகனங்களால் கும்மிடியில் போக்குவரத்து பாதிப்பு
புதிய பதிவுக்கு வரும் வாகனங்களால் கும்மிடியில் போக்குவரத்து பாதிப்பு
புதிய பதிவுக்கு வரும் வாகனங்களால் கும்மிடியில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 30, 2025 01:55 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த புதிய வாகனங்களின் பதிவு, வாகன தகுதி சான்று உள்ளிட்ட பணி நடக்கிறது.
பதிவுக்கு வரும் புதிய டூ- - வீலர்கள் மற்றும் கார்களை நிறுத்த அந்த அலுவலகத்தில் இடவசதி இல்லாததால், அனைத்து வாகனங்களும், தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
மோட்டார் வாகன ஆய்வாளர், அங்கு நிறுத்தப்படும் நுாற்றுக்கணக்கான வாகனங்களின் எஞ்சின் எண், சேசிஸ் எண் ஆகியவற்றை சரிபார்த்து முடிக்கும் வரை, அந்த வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த சாலையில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மோட்டார் வாகன ஆய்வாளர் தொடர்புடைய பணி என்பதால் அவ்வழியாக கடந்த செல்லும் வாகன ஓட்டிகளும் கேள்வி ஏதும் கேட்காமல் கடந்து செல்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
விரைவில், போக்குவரத்து அலுவலகத்திற்கு, கும்மிடிப்பூண்டியில் தனி இடம் ஒதுக்கி, சொந்த கட்டடத்தில் போதிய இடவசதியுடன் அந்த அலுவலகத்தை இயக்க வேண்டும். அதுவரை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மாற்று இடத்தில் புதிய வாகனங்களின் பதிவு தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.