/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாரச்சந்தையால் கே.ஜி.கண்டிகையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
வாரச்சந்தையால் கே.ஜி.கண்டிகையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தவிப்பு
வாரச்சந்தையால் கே.ஜி.கண்டிகையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தவிப்பு
வாரச்சந்தையால் கே.ஜி.கண்டிகையில் நெரிசல் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜன 13, 2025 01:35 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை - நொச்சலி செல்லும் மாநில நெடுஞ்சாலை வேளாண் விரிவாக்க கிடங்கு அருகே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது.
இந்த சந்தையில், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
பெரும்பாலானோர் வாரச்சந்தைக்கு, இருசக்கர வாகனங்களில் தான் அதிகளவில் வருகின்றனர். அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாத தால், மாநில நெடுஞ்சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதுதவிர சிலர் மாநில நெடுஞ்சாலையோரம் காய்கறி கடைகள் போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் கே.ஜி.கண்டிகை - நொச்சலி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் வாரச்சந்தையின் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் சீரமைப்பதற்கும் எந்த போலீசாரும் வராததால் பல மணி நேரம் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.