/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல் ஊத்துக்கோட்டையில் தொடரும் அவலம்
/
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல் ஊத்துக்கோட்டையில் தொடரும் அவலம்
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல் ஊத்துக்கோட்டையில் தொடரும் அவலம்
சாலையில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல் ஊத்துக்கோட்டையில் தொடரும் அவலம்
ADDED : அக் 22, 2025 10:40 PM

ஊத்துக்கோட்டை: சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களால், நாளுக்கு நாள் நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பஜார் பகுதி உள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் வாகனங்கள், பஜார் வழியே செல்கின்றன. சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை வந்து செல்கின்றனர்.
சாலையின் இருபுறமும் வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். பஜார் பகுதியில், 15 மீட்டரில் சாலை உள்ளது. ஆனால், 10 மீட்டர் அளவிற்கு மட்டுமே தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர்.
இதனால், எதிரெதிர் திசையில் இரண்டு வாகனங்கள் சென்றால், பாதசாரிகள் நடக்க முடியாத நிலை உள்ளது. மேலும், கார், பைக், லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
வாகனங்கள் செல்லும் போது, ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதி விபத்துகள் நடக்கின்றன.
இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

