/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து அலுவலர் பணியின்போது மரணம்
/
போக்குவரத்து அலுவலர் பணியின்போது மரணம்
ADDED : பிப் 07, 2025 02:27 AM

கும்மிடிப்பூண்டி:சோதைனைச்சாவடி பணியில் இருந்த போக்குவரத்து அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பூந்தமல்லி அடுத்த, சென்னீர்குப்பம் பகுதியில் வசித்தவர் செந்தில்குமரன், 54; கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வட்டார போக்குவரத்து அலுவலராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பணியில் இருந்தபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சோதனைச்சாவடி வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாயிலாக, நல்லுார் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரதணை மேற்கொண்டு வருகின்றனர்.

