/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் சிரமத்துடன் கடக்கும் ரயில் பயணியர்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் சிரமத்துடன் கடக்கும் ரயில் பயணியர்
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் சிரமத்துடன் கடக்கும் ரயில் பயணியர்
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம் சிரமத்துடன் கடக்கும் ரயில் பயணியர்
ADDED : டிச 04, 2024 11:24 PM

திருவள்ளூர், ட
திருவள்ளூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், பயணியர் கடும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இங்கு, ஆறு நடைமேடை உள்ளது. இவற்றினை கடக்க மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த முடியாமல், ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து வந்தனர். விபத்து ஏற்பட்டதால், கடந்த ஆண்டு சுரங்கப்பாதை கட்டி பயணியர் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதற்காக ஆறு நடைமேடையை இணைக்கும் வகையில், 35 'கான்கிரீட்' பெட்டி அமைக்கப்பட்டது. இந்த 'கான்கிரீட்' இணைக்கும் போது, மழைநீர் உள்ளே வராமல் இருப்பதற்கான வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், சிறு மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிந்து, குளமாகி விடுகிறது.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, பயணியர் சிரமத்துடன் மழைநீரில் நடந்து செல்கின்றனர். எனவே, தென்னக ரயில்வே துறை, சுரங்கப்பாதையில் மழைநீர் கசிவை தடுத்து, ரயில் புறப்பாடு, வருகை குறித்த தகவல் பலகை மற்றும் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
மேலும், கண்காணிப்பு கேமரா மற்றும் போதிய விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.