/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
/
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
மீனவர்களின் வாரிசுதாரருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி
ADDED : நவ 20, 2025 03:50 AM
திருவள்ளூர்: மீனவர் சமூகத்தை சேர்ந்த ௨௦ பட்டதாரி இளைஞர்களுக்கு, குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீன்வள துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, மீனவர் சமூகத்தை சேர்ந்த ௨௦ பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டில், இப்பயிற்சியில் சேர விரும்பும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்கள், இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சென்னை மீன்வள துறை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் பொன்னேரியில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பொன்னேரி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில், வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு, 044 - 2797 2457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

