/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ராக்கெட் பால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
திருத்தணியில் ராக்கெட் பால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
திருத்தணியில் ராக்கெட் பால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
திருத்தணியில் ராக்கெட் பால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 29, 2024 06:47 AM

திருத்தணி: திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு ராக்கெட் பால் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ராக்கெட் பால் சங்கம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாநில நடுவர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு ராக்கெட் பால் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார், பரணிகுமார் மற்றும் ஏழுமலை ஆகியோர் பங்கேற்று, உடற்கல்வி ஆசிரியர்கள் ராக்கெட் பால் விளையாட்டு எவ்வாறு தோன்றியது. இந்த விளையாட்டு எவ்வாறு விளையாடுவது, விளையாட்டு விதிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கும் பதில் கூறினார்.
இந்த பயிற்சி முகாமில், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கான சான்றுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ராக்கெட் பால் விளையாட்டு குறித்து கையேடு புத்தகம் அறிமுகப்படுத்தி, பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டன.