/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவர்களுக்கு களி நண்டு வளர்ப்பு பயிற்சி
/
மீனவர்களுக்கு களி நண்டு வளர்ப்பு பயிற்சி
ADDED : பிப் 15, 2024 01:45 AM
பொன்னேரி:பழவேற்காடு மீனவ பகுதியில், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் பண்ணை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் செயல்படுகிறது.
இங்கு, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கான களி நண்டு வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நேற்று நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குனர், முனைவர் சிதம்பரம் பயிற்சியை துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற மீனவர்களுக்கு, களி நண்டு வளர்ப்பு, கொழுப்பேற்றுதல், விதை நண்டு உற்பத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
உதவி பேராசிரியர்கள் முனைவர் சுருளிவேல், பவின்குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் வளர்ப்பு நண்டுகளின் வகைகள், நவீன தொழில்நுட்ப மேலாண்மை, நோய் மேலாண்மை, வணிக வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.

