/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீருடை காவல் பணியாளர் தேர்வுக்கு நாளை பயிற்சி
/
சீருடை காவல் பணியாளர் தேர்வுக்கு நாளை பயிற்சி
ADDED : டிச 20, 2024 12:11 AM
திருவள்ளூர், சீருடை பணியாளர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப் - 4, காவலர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்வுக்கு தயாராவோருக்கு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பட்டாபிராம் இந்து கல்லுாரியில் இலவச பயிற்சி வகுப்பு, நாளை முதல் துவங்குகிறது.
பயிற்சி வகுப்பு வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 - மாலை 4:30 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள கல்லுாரிக்கு நேரில் செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.