/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'போக்சோ' குறித்த பயிற்சி
/
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'போக்சோ' குறித்த பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'போக்சோ' குறித்த பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'போக்சோ' குறித்த பயிற்சி
ADDED : பிப் 01, 2025 12:55 AM

கொப்பூர்:கடம்பத்துார் ஒன்றியம், கொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடம்பத்துார் ஒன்றிய அளவிலான பள்ளி ஆசிரியர்களுக்கு, பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் போக்சோ சட்டம் குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
கொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் யோகானந்தம் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் சார்பில், முதுநிலை கணித விரிவுரையாளர் நட்ராஜ் பங்கேற்றார்.
குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து, ஆசிரியர் பயிற்சி பயிற்றுநர் அருணன் விளக்கி பேசினார்.
மணவாள நகர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் பாரத்தீபன் பங்கேற்று, போக்சோ வழக்கு பதிவு மற்றும் நீதிமன்ற நிகழ்வுகள் பற்றி விளக்கினார்.
மேலும், மணவாள நகர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் குமரேசன், குழந்தைகள் பாலியல் பிரச்னைகளை கையாளுதல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்.
வெண்மணம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாண்டியன், போக்சோ சட்டம் கையாளும் முறை பற்றி விளக்கினார்.