/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் மின்மாற்றி பழுது: நோயாளிகள் அவதி
/
திருத்தணி அரசு மருத்துவமனையில் மின்மாற்றி பழுது: நோயாளிகள் அவதி
திருத்தணி அரசு மருத்துவமனையில் மின்மாற்றி பழுது: நோயாளிகள் அவதி
திருத்தணி அரசு மருத்துவமனையில் மின்மாற்றி பழுது: நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 18, 2025 02:04 AM

திருத்தணி:திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்மாற்றி பழுதடைந்ததால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, 45 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக ஐந்து அடுக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் பொன்னேரியில் நடந்த அரசு விழாவில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை, 3:00 மணி வரை பெய்த மழையால் மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கும் மின்மாற்றி திடீரென வெடித்து பழுதடைந்தது. இதனால் மருத்துவமனை முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின் வசதி இல்லாததால் மருத்துவமனையில் தங்கியிருந்த உள்நோயாளிகள் மற்றும் மருத்துவர் உள்பட செவிலியர்கள் சிரமப்பட்டனர்.
அவசர பிரிவிலும் மின்சப்ளை இல்லாததால், அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் சிரமப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்மாற்றியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டும் பயனில்லை.
இதையடுத்து அதிகாலை 3:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மின்சப்ளை இல்லை. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றி காலை 8:00 மணி வரை மின்வினியோகம் செய்யப்பட்டது.
காலை, 8:00 மணிக்கு மேல், புதிய மின்மாற்றி கொண்டு வரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.